தமிழர் திருவிழா கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க நாட்டில் உள்ள சவுத் கரோலினா மாகாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோலவே இந்த வருடமும் அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் திருவிழா கொண்டாட்டம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பம்சம் யாதெனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தன் தொப்புள்கொடி உறவுகளை காண இந்த மாகாணத்திற்கு வருகை தந்த தாய் தகப்பனார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்
இதில் அனைத்து வயது பிரிவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தந்தனர்.
இந்த விழாவில் ஆடல் பாடல் இசை நாடகம் சிலம்பம் இசைக்கருவி இசை அமைத்தல் என 50 நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் திரை இசை பாடல்கள், திரையிசை பாடல்களின் நடனங்கள் முதலியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நிகழ்ச்சிகளாக மக்களுக்கு விருந்து அளித்தனர்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது முதல் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த anaivarin ulaippum alapariyathu.
இந்த நிகழ்ச்சி ஆனது 1:00 மணிக்கு தொடங்கி இரவு 8:00 மணி 45 நிமிடத்திற்கு நிறைவடைந்தது.
இந்த இடைவெளியில் 50 நிகழ்ச்சிகளும் மிக அழகாக நேர்த்தியாக வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் ரசிக்கத்தக்க வகையில் வடிவமைத்திருந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒரு நபராவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்கள் ஏனெனில் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெற்றது 300 குடும்பங்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
anaivarukkum iravu unavu parimarapattathu.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைய நடைபெற நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைத்த அனைத்து நபர்களுக்கும் தமிழ் பேச்சு வலையொளி வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த காணொளியில் பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு வழங்குகின்றோம்
எங்களது நோக்கமே இந்த கொண்டாட்டமானது ulagam muluvathum valum தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காணொளி உருவாக்கப்படுகிறது.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
நன்றி.
No comments:
Post a Comment
Thanks