Quick Links

Showing posts with label entertainment. Show all posts
Showing posts with label entertainment. Show all posts

Tuesday, July 29, 2025

Cooliee movie - $400K pre-booking in USA - Thalaivar Rajni's 50 years in cinema vibes on


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் விவரங்கள் இதோ. கூலி திரைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் அமீர்கான் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார், என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 


படத்தின் விவரங்கள்:

நடிகர்கள்: ரஜினிகாந்த், அமீர்கான் (கௌரவ தோற்றம்), நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரேகா.

இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்.

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்.

இசை: அனிருத் ரவிச்சந்தர்.

பாடலாசிரியர்: அறிவு.

வெளியீட்டு தேதி: ஆகஸ்ட் 14, 2025 என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூடுதல் தகவல்கள்:

ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் இது.

சத்யராஜ், கமல்ஹாசன், ஸ்ரோபனா போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் இது.

கூலி திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைகிறார்கள்.

சமீபத்தில், கூலி திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அமீர்கான் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார், என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Friday, February 28, 2025

தமிழர் திருவிழா கொண்டாட்டம் - 2025, சவுத் கரோலினா | தமிழ் பேச்சு123| Tam...

 தமிழர் திருவிழா கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க நாட்டில் உள்ள சவுத் கரோலினா மாகாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 அதுபோலவே இந்த வருடமும் அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் திருவிழா கொண்டாட்டம் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் சிறப்பம்சம் யாதெனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தன் தொப்புள்கொடி உறவுகளை காண இந்த மாகாணத்திற்கு வருகை தந்த தாய் தகப்பனார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்

 இதில் அனைத்து வயது பிரிவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தந்தனர்.

 இந்த விழாவில் ஆடல் பாடல் இசை நாடகம் சிலம்பம் இசைக்கருவி இசை அமைத்தல் என 50 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் திரை இசை பாடல்கள், திரையிசை பாடல்களின் நடனங்கள் முதலியவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நிகழ்ச்சிகளாக மக்களுக்கு விருந்து அளித்தனர். 

 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது முதல் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த anaivarin ulaippum alapariyathu.

 இந்த நிகழ்ச்சி ஆனது 1:00 மணிக்கு தொடங்கி இரவு 8:00 மணி 45 நிமிடத்திற்கு நிறைவடைந்தது.



 இந்த இடைவெளியில் 50 நிகழ்ச்சிகளும் மிக அழகாக நேர்த்தியாக வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் ரசிக்கத்தக்க வகையில் வடிவமைத்திருந்தனர்.



  ஒவ்வொரு குடும்பத்திலும்   தலா ஒரு நபராவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்கள் ஏனெனில் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெற்றது 300 குடும்பங்கள் இதில் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

anaivarukkum iravu unavu parimarapattathu.

 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் கௌரவிக்கப்பட்டனர்.



 இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அமைய நடைபெற நேரடியாகவோ மறைமுகமாகவோ உழைத்த அனைத்து நபர்களுக்கும் தமிழ் பேச்சு  வலையொளி வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



 இந்த காணொளியில் பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை ஒருங்கிணைத்து உங்களுக்கு வழங்குகின்றோம் 



எங்களது நோக்கமே  இந்த கொண்டாட்டமானது  ulagam muluvathum valum தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காணொளி உருவாக்கப்படுகிறது.



 இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.



 நன்றி.

Read More...